சமந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் கடமையைத் தடுத்தது மற்றும் அதிகாரிகளைத் தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தால் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தொடர்பான தீர்ப்பு நேற்றையதினம் அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பதுளை நீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பினை ஜுலை 28ஆம்திகதி அறிவிப்பதாக குறிப்பிட்டு ஒத்திவைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்