தையிட்டி: அடுத்தது என்ன? யாழ்.நகரில் கலந்துரையாடல்

தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால் நிலமிழந்த தமிழர்களின் ஏற்பாட்டில் தையிட்டி: அடுத்தது என்ன? எனும் தலைப்பிலான கலந்துரையாடல் புதன்கிழமை (15.04.2026) மாலை-03 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளது.

தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை அளவீடு செய்து விடுவிப்போம் எனச் சிறிலங்கா அரசின் சார்பில் அமைச்சர் சந்திரசேகர் கடந்த- 11 ஆம் திகதி சனிக்கிழமை தெரிவித்திருந்தார். எனினும், திஸ்ஸ விகாரையையும், அது அமைந்துள்ள காணியையும் என்ன செய்யப் போகிறார்கள்? என்பது தொடர்பில் எந்தவொரு தெளிவான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் அதேவேளை மறுபுறம் சட்டவிரோத ஆக்கிரமிப்பு விகாரையைப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்குப் பின்னாலுள்ள உள் நோக்கங்களையும், சதித் திட்டங்களையும் புரிந்து கொள்ளவும், இனிவரும் காலங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீட்டெடுப்பதற்கு நாம் கையாள வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பாகவும் ஆராயும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்