நள்ளிரவில் தீ விபத்து: தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று சனிக்கிழமை (25) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தீ பரவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு தீயணைப்புப் பிரிவினரின் உதவியுடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தீவிர முயற்சியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், வீட்டின் சொத்துக்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,  நாரஹேன்பிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.