பேராதனையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பலி

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை – கம்பளை பிரதான வீதியின் கொடபொல பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (29) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனையிலிருந்து கம்பளை நோக்கிச் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளொன்றே, அவ்வேளையில் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தினால் படுகாயமடைந்த பாதசாரியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் உடனடியாகப் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாதசாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கொடபொல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் பேராதனை பொலிஸார் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.