மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் பலி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டம் பகுதியில் கட்டிடம் ஒன்றிற்கு அருகில் மண்ணை அகற்றி வேலைசெய்து கொண்டிருந்த நபர்ரொருவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தின்போது காயமடைந்து, மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிளன்டில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் மற்றுமொரு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகற்றிக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மஸ்கெலியா பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.