யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் (19) தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நடத்தப்படும் போராட்டங்களின் தொடர்ச்சியாக நடந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.





