அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகல்: கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக கடிதம்

 அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி நேற்று வில​கி​னார். தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்​டு, கனத்த இதயத்​துடன் வெளி​யேறு​வ​தாக பழனி​சாமிக்கு அவர் கடிதம் எழு​தி​யுள்​ளார்.பிரபல நடிகை கவுதமி கடந்த 1997-ம் ஆண்​டில் பாஜக​வில் இணைந்​து, 25 ஆண்​டு​களுக்கு மேல் பயணித்து வந்​தார். கடந்த 2023-ம் ஆண்​டில் கட்​சி​யில் கருத்து வேறு​பாடு ஏற்​பட்ட நிலை​யில், `‘கட்​சி​யிடம் இருந்​தோ, அதன் தலை​வர்​களிடம் இருந்தோ எனக்கு எந்த ஆதர​வும் கிடைக்​க​வில்​லை.

எனது வாழ்க்கை சம்​பாத்​தி​யங்​களில் என்னை ஏமாற்​றிய நபருக்கு கட்​சித் தலை​வர்​கள் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரு​கின்​றனர்’’ என்று குற்​றம்​சாட்​டிய கவுதமி, பாஜக​வில் இருந்து வில​கி​னார்.

பின்​னர், கடந்த 2024-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் அதி​முக​வில் இணைந்​தார். ‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் செயல்​பாடு​கள், கட்​சியை அவர் வழிநடத்​திச் செல்​வது, எல்​லோரும் இணைந்து பணி​யாற்ற வேண்​டும் என்ற அவரது எண்​ணங்​கள் ஆகியவை என்னை கவர்ந்​தன.

அதனால் அதி​முக​வில் இணைந்​தேன்’’ என்று அப்​போது கூறி​யிருந்​தார். அதி​முக​வில் அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது. கடந்த 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கும் சென்று அதி​முக வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார்.

இந்​நிலை​யில், அதி​முக​வில் இருந்து வில​கு​வ​தாக கவுதமி நேற்று அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு அவர் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், ‘தற்​போதைய அரசி​யல் சூழலைக் கருத்​தில் கொண்​டு, நான் சமூக சேவை செய்ய ஏது​வான வகை​யில், அதி​முக​வில் நான் வகித்து வரும் அடிப்​படை உறுப்​பினர் மற்​றும் கட்​சி​யின் கொள்கை பரப்பு துணைச் செய​லா​ளர் பத​வி​யில் இருந்து கனத்த இதயத்​துடன் என்னை விடு​வித்​துக் கொள்​கிறேன்​’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

சமீபத்திய செய்திகள்