லடாக்கில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து

இந்தியாவின் லடாக்கில் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

லடாக் யூனியன் பிரதேசத்தில் சீனாவுடனான சர்வதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள  பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இராணுவ ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி லடாக்கின் லே பகுதியில் சீட்டா ரக இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று பயணித்துள்ளது.

இப்பயணத்தின்போது, அந்த ஹெலிகொப்டரில் இராணுவ மேஜர் ஜெனரல் சச்சின் மேதா உட்பட இரண்டு அதிகாரிகள் பயணித்துள்ளனர்.

லே பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த ஹெலிகொப்டர் மலைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இராணுவ அதிகாரிகள் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த இச்சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்த 3 இராணுவ அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான மேலதிக நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.