தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமைத் திட்டமாக டிஜிட்டல் மயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பொதுமக்கள் அரசாங்கத்துடனான அனைத்துப் பணக் கொடுக்கல் வாங்கல்களையும் இணையவழியில் மேற்கொள்ளும் வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை திங்கட்கிழமை (01.09.2025) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வளவு காலமும் கொழும்புக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தொலைதூரக் கிராமங்களுக்குப் பரவலாக்கப்பட்டு அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை நெருக்கமாக முன்னெடுப்பதற்கு மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினார்.





