தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து சாதிய படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வைப்போம்

தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்​தம் கொடுத்து, சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச்​சட்​டத்தை இயற்ற வைப்​போம் என, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் உறு​திபட தெரி​வித்​துள்​ளார்.

தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி சார்​பில் உரு​வாக்​கப்​பட்ட “இணை​யர் தேர்வு உரிமை நிலை​நாட்​டு​தல் மற்​றும் கவுரம் என்ற பெயரிலான கொலைகள், குற்​றங்​கள் தடுப்பு மசோதா தமிழ்​நாடு – 2026 மாதிரி சட்​டம்”, தி.நகரில் உள்ள மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலக் குழு அலு​வல​கத்​தில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்​டார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் சாதிய படு​கொலைகள் என்​பது தினந்​தோறும் நடந்து கொண்​டிருக்​கின்​றன.

சாதி, மத மறுப்பு திரு​மணங்​களை செய்​தவர்​கள் எப்​போது, என்ன நடக்​கும் என்று தெரி​யாமலே ஒரு அச்​சத்​திலேயே வாழ்ந்து வரு​கின்​றனர்.

சாதிய படு​கொலையை தடுக்க தமிழக அரசு என்​னென்ன முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை எடுக்​க வேண்​டும் என, சென்னை உயர்​நீ​தி​மன்​றம் ஏற்​கனவே பரிந்​துரைகளை வழங்​கி​யிருந்​தும், அவை எது​வும் தமிழக அரசால் நடை​முறைப்​ படுத்​தப்படவில்​லை.

சாதிய படு​கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்​டும். இதற்​காக, கடந்த ஆட்​சி​யில் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஒரு ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது.