இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10 வீட்டுப் பகுதியில் யுத்த காலமான 1990 ஆண்டுக்காலப் பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்ட வெடிக்காத நிலையில் பீப்பாய் எறிகணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் 10 வீட்டுப் பகுதியில் தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை துப்பரவுப் பணியை மேற்கொண்ட பொழுது வெடிக்காத நிலையில் இந்த எறிகணை இனங்காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக இராமநாதபுரம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன் தற்பொழுது கிளிநொச்சி நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் அதை எடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



