கல்கிசை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுதிட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் இருவர் படுகாயமடைந்து லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அங்குலானை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார். காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




