கொழும்பு மாநகர சபைக்கு சேவையை பெற வரும் மக்களுக்கு சரியான வழிக்காட்டல் அவசியம் என வட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை கூட்டத்தின் போது உரையாற்றும் போதே வட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாநகர சபை என்பது பிறப்பு முதல் இறப்பு வரையிலான சேவைகளை வழங்குகின்ற ஒரு நிறுவனமாகும்.
அதன் மூலம் கொழும்பு நகரத்திற்கு வருகின்ற 06 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றது.
அச்சேவைகளை பெறுவதற்கு வருகின்ற மக்களின் வசதிக்காக பிரேரணைகளை சபையின் சமர்பித்தேன்.
அதாவது கொழும்பு மாநகர சபைக்கு நாளாந்தம் பெருமளவிலான மக்கள் தமது சேவைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வருகின்றனர்.
அவ்வாறு வரும் போது தமது சேவைகளை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பிரிவுகளுக்கு அனுப்பப்படும் போது சரியான ஒரு வழிக்காட்டல் (directions) இல்லாத காரணத்தினால் மிகவும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
நகர மண்டப வளாகத்தில் சபைக்கு சொந்தமான இரண்டு கட்டிடங்கள் காணப்படுவதுடன் அக் கட்டிடங்களுக்குள் அமையப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பிரிவுகளுக்கு அனுப்படுவதற்கு (உதாரணமாக: one stop shop> வருமான பிரிவு மாநகர மதீப்பிட்டு திணைக்களம்- 2வது மாடி) சரியான ஒரு வழிக்காட்டலைச் (directions) செய்யுமாறு சபையில் பிரேரித்திருந்தேன் என்றார்.


