செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்

செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர்,

“இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளா, இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்” எனக் கூறினார்.