தயாசிறி ஜயசேகர சி.ஐ.டியில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை சுங்கத்திடம் இருந்து 323 கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தயாசிறி ஜயசேகர இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தயாசிறி ஜயசேகரஇ குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த 4ஆம் திகதியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.