மருதானையில் விசேட சோதனை நடவடிக்கை ; 30 பேர் கைது!

கொழும்பு – மருதானையில் நேற்று சனிக்கிழமை மாலை (27) பல இடங்களில், பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டன.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விசேட சோதனை நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினரும் இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.