யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆக்க இலக்கியக் கழகம் மற்றும் மரபுரிமைக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய நிலம்- 2026 கண்காட்சி நேற்றுப் புதன்கிழமை
( 17.06.2026) காலை ஆரம்பமானது. இந் நிலையில் இன்று வியாழக்கிழமையு ம் (18.06.2026) சிறப்பாக நடைபெற்றது.
தமிழர்களின் கலை, பண்பாடு, கலாசார மரபுரிமைகளை இளைய தலைமுறைப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த கண்காட்சியை இரு தினங்களிலும் ஏராளமானோர் பார்வையிட்டுப் பயன்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






