சிறுவர் பாதுகாப்புத் தேசியக் கொள்கை விழிப்புணர்வு

சிறுவர் பாதுகாப்புத் தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்ட நிகழ்வு புதன்கிழமை (17.03.2026) காலை-09 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் கை.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பும் கிராம மட்டத்தில் சிறுவர் நேயம் மிக்க சூழலை உருவாக்குதலும் தொடர்பாக யுனிசெப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி.ச.ஷர்மிலியும், சிறுவர் பாதுகாப்புத் தேசிய கொள்கைகள் தொடர்பாகச் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரவிமோகனும்,
உடுவில் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பு.ரஜினியும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினர்.