யாழ் தேவி தொடருந்து சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் ‘யாழ் தேவி’ ரயில் சேவை நாளை திங்கட்கிழமை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய அட்டவணையின்படி, குறித்த ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சேவையில் ஈடுபடும்.

அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் சேவையில் ஈடுபடவுள்ளது.

இந்த ரயில் முழுமையாக குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

பயணிகள் தமக்கான பயணச்சீட்டுகளை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாகவோ அல்லது இருக்கை முன்பதிவு வசதிகள் கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்றோ பெற்றுக்கொள்ள முடியும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.