கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து: ஒருவர் பலி!

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர – நிசருவ பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.