விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி

தமிழக வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி: வேளாண் பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லை.சிறுதானியங்கள், குறுதானியங்கள், மானாவாரி பயிர்களின் உள்ளூர் விற்பனைக்கான உத்தரவாதம், அரசு கொள்முதல், மானியத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம். பதிலுரையிலாவது கரும்புக்கு ஆதாரவிலையாக ரூ.4500, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 வழங்குவது, நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உயர்வு, நிவாரணம் போன்றவற்றை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மாசிலாமணி

மாசிலாமணி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன்: சில திட்டங்கள் வரவேற்கும்படி இருந்தாலும் மாநில வேளாண் பட்ஜெட்டில் நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவிக்காதது, பால் கொள்முதல் விலையை உயர்த்தாதது, தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யாதது மற்றும் புதிய மின் இணைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

சாமி. நடராஜன்

சாமி. நடராஜன்

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளை ஏமாற்றியும், வஞ்சித்தும் உள்ளது. விவசாயிகளின் வலியும், வேதனையும், எதிர்பார்ப்பும் முதல்வருக்குதெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்த கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி, நெல்லுக்கு ரூ.3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500 என அறிவித்த எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கவர்ச்சி அறிவிப்புகளை ரத்து செய்துவிட்டு தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம், விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

இளங்கீரன்

இளங்கீரன்

விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பு பொதுச்​செய​லா​ளர் ஆறு​பாதி ப.கல்​யாணம்: நெல் குவிண்​டாலுக்கு ரூ.3,500 தரப்​படும் என்​பது உட்பட விவ​சா​யம் தொடர்​பாக தவெக தேர்​தல் அறிக்​கை​யில் கூறிய எதை​யும் செய்​ய​வில்​லை. குறைந்​த​பட்​சம் ஏக்​கருக்கு ரூ.6 ஆயிரம் நடவு மானி​யம் வழங்க வேண்​டும். மற்ற மாநிலங்​களில் தேசிய மயமாக்​கப்​பட்ட வங்கி கடன்​களை கூட தள்​ளு​படி செய்​துள்​ளனர்.

ப.கல்யாணம்

ப.கல்யாணம்

தமிழ்​நாடு விவ​சாய சங்​கங்​களின் கூட்​டியக்க தலை​வர் காவிரி தனபாலன்: மண்வள பாது​காப்பு திட்​டத்​துக்கு ரூ.122 கோடி ஒதுக்​கீடு, இயற்கை வேளாண்​மைக்கு முக்​கி​யத்​து​வம், திருச்சி மற்​றும் கோயம்​புத்​தூரில் ஏற்​றுமதி மண்​டலங்​கள் அறி​வித்​தல் போன்ற அம்​சங்​கள் வரவேற்​கத்​தக்​கவை.

தனபாலன்

தனபாலன்

ஆனால், தேர்​தல் வாக்​குறு​தி​யாக கூறப்​பட்ட ஏக்​கருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்​கத்​தொகை, நெல்​லுக்​கான ஊக்​கு​விப்பு மானி​யம், விவ​சா​யிகளுக்​கான பென்​ஷன் போன்ற முக்​கிய அறி​விப்​பு​கள் இடம் பெறாதது விவ​சா​யிகளை ஏமாற்​றமடையச் செய்​துள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறி​யுள்​ளனர்.