வரவு செலவு திட்டம் தாக்கல் செய்த அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு

 சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் தாக்​கல் செய்த அமைச்​சர்​கள் மரிய வில்​சன், வினோத் ஆகியோரைப் பாராட்​டிய முதல்​வர் விஜய், ‘வள​மான தமிழகத்தை நோக்கி வெற்​றிப் பயணம் தொடரட்​டும்’ என தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான திருத்​திய பட்​ஜெட் நேற்று முன்​தின​மும், வேளாண் பட்​ஜெட் நேற்​றும் தாக்​கல் செய்​யப்​பட்​டன. பட்​ஜெட்​டு​களை தாக்​கல் செய்த நிதித்​துறை அமைச்​சர் மரிய வில்​சன் மற்​றும் வேளாண்​மைத் துறை அமைச்​சர் வினோத் ஆகியோ​ருக்கு முதல்​வர் விஜய் தனது பாராட்​டுகளைத் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில்கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தின் வளர்ச்​சியை இலக்​காக​வும், மக்​கள் நலனை மைய​மாக​வும் கொண்டு ஆட்​சிப்பொறுப்​பேற்ற மூன்றே மாதங்​களில் அனை​வரும் பாராட்​டும் வகை​யில் 2026-27-ம் ஆண்​டுக்​கான திருத்​திய பட்​ஜெட்டை தாக்​கல் செய்​துள்ள நிதித்​துறை அமைச்​சர் மரிய வில்​சன், வேளாண் பட்​ஜெட்டை தாக்​கல் செய்​துள்ள வேளாண்மை துறை அமைச்​சர் வினோத் ஆகியோ​ருக்கு எனது வாழ்த்​துகள் மற்​றும் பாராட்​டு​கள்.

அதே​போல் வேளாண் பட்​ஜெட், தமிழகத்​தின் வேளாண் வளர்ச்​சி​யோடு, அதன் தொழில்​சார்ந்த கால்​நடை மற்​றும் மீன் வளர்ப்​பு, பால்​வளம், உணவுப்​பொருட்​களை பதப்​படுத்​துதல் மற்​றும் மதிப்​புக் கூட்​டு​தல் போன்ற தொழில்​களை​யும் மேம்​படுத்​து​வதுடன், அனைத்​துத் தரப்பு விவ​சா​யிகளின் நலனை​யும் வாழ்​வா​தா​ரத்​தை​யும் மேலும் வலுப்​படுத்​தும் வகை​யில் சிறப்​பாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. வளமான தமிழகத்தை நோக்கிய நமது வெற்​றிப் பயணம் தொடரட்​டும்​. இவ்வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.