தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு… இளவரசர் ஹரிக்கு பெரும் பின்னடைவு

இளவரசர் ஹரி முதலான ஏழு பிரபலங்கள் டெய்லி மெயில் பத்திரிகை மீது தொடர்ந்த வழக்கில், ஹரி தரப்பு தோல்வியை சந்தித்துள்ளது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு…

பிரித்தானிய இளவரசர் ஹரி, பிரபல பிரித்தானிய பாடகர் எல்ட்டன் ஜான், திரைப்பட தயாரிப்பாளரான டேவிட் ஃபர்னிஷ், நடிகைகள் எலிசபெத் ஹர்லி, சாடி ஃப்ரோஸ்ட், பிரித்தானிய ஜமைக்கா ஆர்வலரான டோரீன் லாரன்ஸ் மற்றும் முன்னாள் அமைச்சரான சர் சைமன் ஹியூஸ் ஆகியோர், டெய்லி மெயில் பத்திரிகையை வெளியிடும் Associated Newspapers Ltd (ANL) நிறுவனத்துக்கு எதிராக வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார்கள்.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு... இளவரசர் ஹரிக்கு பெரும் பின்னடைவு | Prince Harry Lost In Phone Hacking Case

அந்த நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள், பல ஆண்டுகளாக, சட்டவிரோதமாக தங்களைக் குறித்த தகவல்களை சேகரித்து செய்தியாகிவந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

அதாவது, தொலைபேசியை ஒட்டுக்கேட்டல், தனியார் புலனாய்வாளர்கள் மூலம் தகவல் சேகரித்தல், பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்து தகவல்களை சேகரித்தல் ஆகிய விடயங்கள் மூலம் தங்களைக் குறித்த தகல்களை சேகரித்து செய்தி வெளியிட்டதாக ஹரி தரப்பு குற்றம் சாட்டியிருந்தது.

இளவரசர் ஹரிக்கு பெரும் பின்னடைவு

ஆனால், ஹரி தரப்பின் விவாதங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஊடக நிறுவனம் சட்டவிரோதமாக தகவல் சேகரித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதையும் ஹரி தரப்பு ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை என்று கூறி, அவர்கள் தரப்பு விவாதங்களை நீதிபதியான Mr Justice Nicklin தள்ளுபடி செய்துவிட்டார்.

 

விடயம் என்னவென்றால், டெய்லி மெயிலின் உரிமையாளர், வழக்குச் செலவுகளை ஹரி தரப்பிடம் கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வழக்குக்காக செலவிடப்பட்ட சுமார் 50 மில்லியன் பவுண்டுகளை ஹரி மற்றும் வழக்குத் தொடர்ந்த அந்த ஆறு பேரிடமுமிருந்து வசூலிக்க முயற்சி செய்ய இருப்பதாக ANL நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக, ஹரி தரப்பு வழக்கில் தோல்வி அடைந்துள்ளதுடன், சுமார் 50 மில்லியன் பவுண்டுகளும் வழங்கவேண்டிய நிலை உருவாகியுள்ளதால் அது ஹரிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.