பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்  152 மேலதிக வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.