டென்மார்க் Naestved கற்பக விநாயகர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (15.05.2026) அன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் வழிபாடு மிகவும் எழுச்சியுடன் நடந்தேறியது.
இந்நிகழ்வில் மக்கள் உணர்வுபூர்வமாக நெய்விளக்கேற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இவ்வேளையில் ஆலயத்தில் ஆத்மசாந்தி பொதுப் பிரார்த்தனை பாடல்கள் பாடப்பட்டு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.






