கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேன் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியினுள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
மாஸ்பொத, போகொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (30) யாரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, குறித்த பஸ் வண்டிக்குள் ஏறி இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.


