கட்சியின் தீர்மானத்தை மீறியமையால் முல்லைத்தீவு கரைத்துறைப் பிரதேச சபையின் முள்ளியவளை கிழக்கு வட்டார உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், கரைதுறைப் பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு
இந் நிலையில் புதிய உறுப்பினர் திங்கட்கிழமை (06.07.2026) சமாதான நீதவான் செல்வராசா பூலோகசீலன் முன்னிலையில் சத்தியம் செய்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் ஆசிர்வாதம் பெற்றுத் தனது நேரடி மக்கள் பணியை ஆரம்பித்தார்.






