கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விரத உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில்   வெள்ளிக்கிழமை (12.06.2026) மாலை பிரதோஷ விரத உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று மாலை-04 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள், வசந்த மண்டபப் பூஜையைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் தேவி சமேதரராக உள்வீதி உலா வந்தார்.