16 ஆம் திகதி வரை வடக்கு- கிழக்கின் சில பகுதிகளுக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு!

எதிர்வரும்-16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை பரவலாக அல்லாமல் தனித் தனிப் பகுதிகளாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதி பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தென்மேற்குப் பருவக்காற்றுக் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் கடற் பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் தயவு செய்து கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.