கெப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்தல்: இளம் தம்பதி கைது!

கெப்  ரக வாகனமொன்றில் பெருமளவிலான கஞ்சா தொகையைக் கடத்திச் சென்ற தம்பதியினரை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பத்துளுஓயா பொலிஸ் வீதித் தடையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து 17 கிலோ கிராம் 985 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கணவனும், 22 வயதுடைய அவரது மனைவியும் ஆவர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டு கடத்தி வரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (10)  திங்கட்கிழமை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவ  பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.