கொழும்பில் பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் மலேசிய நாட்டவர் கைது!

கொழும்பில் பெருந்தொகையான சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மலேசிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சனிக்கிழமை (25) கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணவகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் நடவடிக்கையின் போது, சந்தேகநபரின் வசம் இருந்த 36,200 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் அவர் பயன்படுத்திய சிற்றூர்தி வாகனம் (Cab) என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய மலேசிய நாட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொம்பனித்தெரு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.