நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று திங்கட்கிழமை (27) சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏக்கல பகுதியில் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஜா-எல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நரியாகம பகுதியில் சிலாபம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 60 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் முகுனுவடவன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



