ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அன்னசத்திர மண்டபத் திறப்பு விழாவில் இடம்பெறவுள்ள தமிழகத்தின் பிரபல ஆன்மீக, இலக்கியப் பேச்சாளர் செந்தமிழ்ச் சுடர்.கி.சிவகுமார் நேரடியாகப் பங்கேற்றுச் சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தவுள்ளார்.
இதனை முன்னிட்டுச் சனிக்கிழமை (11.07.2026) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இலக்கியப் பேச்சாளர் சிவகுமார் வருகை தந்துள்ளார்.






