தமிழ்த்தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அம்பாள்குளம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் J/105 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள யாழ்.வீரகாளியம்மன் கோவில் அம்பாள்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் “தூய கரங்கள், தூய பிரதேசம்” எனும் உயரிய கோட்பாட்டிற்கு இணங்க J/105 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வீரகாளியம்மன் கோவில் அம்பாள் குளத்தினைத்  தூய்மைப்படுத்தி புனரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த குளமானது பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருந்து பற்றைகள் வளர்ந்தும் பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகள், மதுபானபோத்தல்கள், பெருமளவான குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இது சுற்று வடிகால் அமைப்பினால் வெள்ளநீர் ( நன்னீர் ) தேங்கும் குளமாகவும் இது காணப்படுகின்றது.
தற்பொழுது தொடர்சியாக சிரமதான அடிப்படையில் முழுமையாகச் சுத்தப்படுத்தப்படுகிறது,

தமிழ்த்தேசிய பேரவை மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 8 ஆம் வட்டார யாழ் மாநகரசபை உறுப்பினர் சாந்தரூபனின், முயற்சியிலும் ஒருங்கிணைப்பிலும் இப் புனரமைப்புப் பணி நடைபெற்று வருகின்றது.