இலங்கைத் தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் மூத்த தமிழறிஞரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா எழுதிய யாழ்ப்பாணத்து வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (26.07.2026) மாலை-03.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், யாழ்.மாவட் டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும்,
யாழ்.இந்தியத் தூதுவர் சாய் முரளி கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண் டனர். மேற்படி நிகழ்வில் பெரு மளவானோர் கலந்து கொண்டனர்.






