நீதித்துறை நெருக்கடி விவாதம் : நாடாளுமன்ற அலுவல்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!

நீதித்துறையில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றம் தலையீடு செய்யும் வகையில் அவசர விவாதத்தை நடத்துமாறு எதிர்க்கட்சி முன்வைத்த யோசனை குறித்து அடுத்த பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே சபாநாயகர் சபைக்கு இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.