நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது!

நீர்கொழும்பில்  56 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 56 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலுபோத்த பகுதியில் திங்கட்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சோதனையின் போது சந்தேகநபரஜடமிருந்து, 75 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த 56 லீற்றர் 250 மில்லிலீற்றர் சட்டவிரோத  மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.