பயணிகள் சேவை அனுமதிப்பத்திர வழங்கலில் கடைப்பிடிக்கவேண்டிய புதிய முறை அறிமுகம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தை வழங்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய புதிய முறைமையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள புதிய முறைமையை மீளாய்வு செய்த பின்னர் 2025 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களைக் கருத்திற்கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காகப் புதிய முறைமையொன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்துத்துறையில் தற்போது முனைப்பாக இயங்கும் பேரூந்து உரிமையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலும், புதிய முதலீட்டாளர்களுக்குப் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்குவதற்கான வாய்ப்புக்களை விரிவாக்கம் செய்வதன் மூலம் தரமான சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயணிகளுக்கு உள்ள உரிiயை உறுதிப்படுத்தும் வகையிலும் இப்பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பயணிகள் சேவைகள் அனுமதிப்பத்திரத்தை வெளியிடல் மற்றும் புதிய பொறிமுறையை அமுல்படுத்துவதற்காக பதில் கடமை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.