பெண்களுக்கான சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் இதனையே பெண்களின் எதிர்பார்ப்பாக காணப்படுவதாக கிழக்கு மாகாண ஐக்கிய பெண்கள் அமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முதலுதவி மையம் செவ்வாய்க்கிழமை (23) கந்தளாயில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளரும் ஹிஜ்ரா மகளிர் சங்க தலைவியுமான எம்.ஆர்.எம்.பிஸ்ரியா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…
தனிமையில் எந்தநேரமும் வெளியில் செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெண்களுக்கான உரிமைகளும் இதன் மூலம் பாதுகாக்கப்பட வேண்டும் இதனை நாம் விரும்பியே களத்தில் இறங்கியுள்ளோம். ஆண்களை போல பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் ..
.அது போன்று சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து காணப்படுகிறது இதனை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இலங்கை பொது சமூகத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களும் இலங்கையின் பொது ஊடகங்களும் தனி கவனம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் . கடந்த சில நாட்களில் பல்வேறு மதவழிபாட்டுத் தளங்கள் ,பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குள் இடம் பெற்ற பல துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அறிக்கைப்படுத்தப்படாத சிறுவர் துஷ்பிரயோகங்களும் இருக்கக் கூடும் என்பது எமது நம்பிக்கையாகும். சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக ஒரு பொதுவான சமூக சக்தியை கட்டியெழுப்புவதற்காக ஒரு சிவில் அமைப்பாக நாம் எடுக்கும் முயற்சிகள் எதிர்காலத்தில் பாரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் கிழக்கு ஐக்கிய மாகாண பெண்கள் அமைப்பும் கந்தளாய் மனித உரிமைகள் முதலுதவி மையமும் இணைந்து “சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சமூகக் கருத்தை உருவாக்குவோம்” என்ற கருப் பொருளின் கீழ் தொடர் நிகழ்ச்சி திட்டங்களை நடாத்தி வருகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மக்களிடத்தில் கருத்துக்களை பெற்று பிரதமருக்கு மனுவை கையளித்தல், சுவரொட்டி பிரச்சாரம், வீதி நாடகம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்றவற்றை தெரிவு செய்யப்பட்ட கந்தளாய், கிண்ணியா, சேருவில, திருகோணமலை போன்ற நகரங்களில் நடைமுறைப்படுத்தல்.





