மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி, வாள் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக புதன்கிழமை (20) நிலத்தை  தோண்டும் போது புதைக்கப்பட்டிருந்த  பழமையான கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் வாள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கண்ட காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறியப்படுத்தியதையடுத்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.