முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்தவர் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.




