வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு

கிளிநொச்சி, ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த  கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய குறித்த  வனவள திணைக்கள  அதிகாரி கிளிநொச்சி ஜெயபுரத்தில் இயங்கும் வட்டார வனவள திணைக்கள  அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (06) சனிக்கிழமை  குறித்த நபர் காணாமல் போயிருப்பதாக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்  இவரது சடலம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஜெயபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இன்று மதியம் சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரமணியம் சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம்  ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.