“அமைச்சருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை” – பழநியில் நிலம் விற்ற அறக்கட்டளை நிர்வாகி மனைவி தகவல்

பழநி​யில் ரூ.100 கோடி ம​திப்பு நிலத்தை முறை​கே​டாக பதிவு செய்த விவ​காரத்​தில் அமைச்​சர் ரமேஷுக்​கும் எங்​களுக்​கும் எந்த தொடர்​பும் இல்லை என சிபிசிஐடி போலீ​ஸா​ரால் தேடப்பட்டு வந்த அறக் கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி தெரி​வித்​தார்.

பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது தொடர்​பாக திண்​டுக்​கல் மாவட்ட சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்றனர். இவ்​வழக்​கில் விழுப்​புரம் அடுத்த திரு​வா​மாத்​தூர் கவுமார மடாலய தலை​வரும் தண்​ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை நிர்​வாகி​களில் ஒரு​வரு​மான முரு​க​தாஸுக்​கும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது.

இதற்​கிடை​யில் விழுப்​புரம் காம​ராஜர் நகரில் உள்ள முரு​க​தாஸ் வீட்​டுக்கு சிபிசிஐடி போலீ​ஸார் 18-ம் தேதி சென்றனர். பூட்​டி​யிருந்த வீட்​டின் கதவையும் உள்ளே இருந்த பீரோவை​யும் உடைத்​து, அதிலிருந்த சில முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றினர். பின்​னர் வீட்​டுக்கு சீல் வைத்​து​விட்டு புறப்​பட்​டுச் சென்​றனர்.

வீட்​டில் யாரும் இல்​லாத​தால் குடும்​பத்​துடன் முரு​க​தாஸ் தலைமறை​வாகிவிட்​ட​தாக சிபிசிஐடி போலீ​ஸார் குறிப்​பிட்​டனர். இந்​நிலை​யில் முரு​க​தாஸ் மற்​றும் அவரது மனைவி லீலா ஆகியோர் நேற்று காலை வீடுதிரும்​பினர். தகவலின்பேரில் விழுப்​புரம் சிபிசிஐடி போலீ​ஸாரிடம் சாவியை பெற்று வீட்டை திறந்​தனர்.

இதுதொடர்​பாக லீலா கூறிய​தாவது: பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்தை எனது மாமா நிர்​வகித்து வந்​தார். அவர் தற்​போது உயிருடன் இல்​லை. மடத்​துக்குச் சொந்​த​மான இடம் தான​மாக வழங்​கப்​பட்​டது​தான். திரு​வா​மாத்​தூரில் உள்ள கவு​மார மடால​யத்தை விஸ்தரிப்பு செய்​வதற்​காக, பழநி​யில் உள்ள மடத்து சொத்தை விற்​பனை செய்ய முடிவு செய்​தோம். எங்​களை வழக்​கறிஞர் ஒரு​வர் அணுகி​னார். ரூ.2 கோடி தரு​வ​தாக தெரி​வித்​தார். அவரது பேச்சை நம்​பி, எனது கணவர் முரு​க​தாஸ் கையொப்​பமிட்​டார்.

ஆனால் எங்​களுக்கு பணம் கொடுக்​க​வில்​லை. வழக்​கறிஞருடன் நடத்​திய அனைத்து உரை​யாடல்​களுக்​கும் ஆதா​ரம் உள்​ளது. முறை​கே​டாக பத்​திரப்​ப​திவு என்​பது தெரி​யாது. இந்த வழக்​கில் எனது கணவர் பெயரை​யும் இணைத்​துள்​ள​தால் சிபிசிஐடி விசா​ரணைக்கு நானும், எனது கணவர் முரு​க​தாஸும் திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​துக்கு கடந்த 18-ம் தேதி சென்​றோம்.

நாங்​கள் உள்பட மடத்​துடன் தொடர்புடைய 7 பேர் ஆஜரானார்கள். 2 நாட்​களாக விசா​ரணை நடத்​தி​விட்டு பின்னர் எங்களை விடு​வித்​தனர். எனது கணவர் முரு​க​தாஸ், திரு​வெண்​ணெய்​நல்​லூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்​ளி​யில் முதுகலை தமிழ் ஆசிரிய​ராக பணி​யாற்றி வரு​கிறார். இதனால் அவர் வழக்​கம்​போல் பணிக்​குச் சென்​றுள்​ளார். அதற்​குள் நாங்​கள் தலைமறை​வாகி​விட்​ட​தாக தவறான தகவலை சமூக வலை​தளத்​தில் பரப்பி வரு​கின்​றனர்.

நாங்​கள் எந்த தவறும் செய்​ய​வில்​லை. தலைமறைவாக​வும் இல்​லை. அழைக்​கும்​போது விசா​ரணைக்கு ஆஜராவோம். இந்​துசமய அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷுக்​கும் எங்​களுக்​கும் எந்தத் தொடர்​பும்இல்​லை. எங்​கள் வீட்​டில் இருந்துகவு​மார மடால​யத்​தின் சொத்து பத்​திரங்​கள், வங்கி கணக்கு புத்​தகங்​கள் உள்​ளிட்​ட​வற்றை போலீ​ஸார் கைப்​பற்றி இருக்​கின்​றனர். இவ்வாறு அவர் கூறினார்.