சமூக அக்கறையைத் தவிர வேறு ‘அக்கரை’ தெரியாது: மு.வீரபாண்டியன் கருத்து

சமூகத்தை மாற்ற வேண்​டும் என்ற அக்​கறையைத் தவிர, எங்​களுக்கு வேறு அக்​கரை தெரி​யாது என இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரி​வித்​தார்.

கும்​பகோணத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: கும்​பகோணத்தை தனி மாவட்​டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்​டும். நகராட்​சிகளில் தூய்​மைப் பணியை தனி​யாருக்கு வழங்​கிய ஒப்​பந்​தத்தை தமிழக அரசு ரத்து செய்​திருப்​பது வரவேற்​கத்​தக்​கது. அதே​போல, மாநக​ராட்​சி, நகராட்​சி, பேரூ​ராட்​சிகளில் பணி​யாற்​றும் துாய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும்.

என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை தனி​யாருக்கு விற்​பனை செய்​வதை ஏற்க முடி​யாது. இதைக் கண்​டித்து இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் விரை​வில் போராட்​டம் நடத்​தப்​படும். விவ​சா​யிகளின் பயிர்க் கடனை முழு​மை​யாக ரத்து செய்ய வலி​யுறுத்தி நாளை (ஜூன் 29) தமிழகம் முழு​வதும் மாவட்​டத் தலைநகரங்​களில் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் சார்​பில் போ​ராட்​டம் நடத்​தப்​படும். கம்​யூனிஸ்ட்​களை பொறுத்​தவரை, எங்​களுக்கு இக்​கரை​யும் தெரி​யாது, அக்​கரை​யும் தெரி​யாது. ஆனால், எங்​களுக்கு ஒரு அக்​கறை​தான் இருக்​கிறது.

அந்த அக்​கறை முதலா​ளித்​துவ சமூகத்​தில் இருந்து அனை​வருக்​கு​மான​தாக சமூகத்தை மாற்ற வேண்​டும் என்​பது​தான். ஜனநாயக சக்தி​களான திமுக, அதி​முக கட்சிகள் இணை​ய​லாம், ஒன்று சேர்ந்து போராடலாம். ஆனால், பாஜக​வுடன் அதி​முக சேரக் கூடாது என்​று​தான் நாங்​கள் சொல்​லுகிறோம். தமிழக அரசின் டெல்லி சிறப்​புப் பிர​தி​நி​தி​யாக தமிழரை தேர்வு செய்ய வேண்​டும்.