சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடுகள்: கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை

 கடற்​கரை, ஊட்​டி, கொடைக்​கானல் உள்​ளிட்ட சுற்றுலா தலங்​களில் குதிரை சவாரிக்கு கடும் கட்​டுப்​பாடு​கள் விதித்​து, தமிழக கால்​நடை பராமரிப்​புத்​துறை உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை தலைமை செயல​கத்​தில், தமிழக சுகா​தா​ரத்​துறை அமைச்​ச​ராக பொறுப்​பேற்ற மருத்​து​வர் அருண்​ராஜ், குதிரைகளிடம் பரவும் கிளாண்​டர்ஸ் தொற்று பரவல் குறித்து அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதனை தொடர்ந்​து, தமிழக கால்​நடை பராமரிப்​புத்​துறை பிறப்​பித்​துள்ள உத்​தர​வு: சென்​னை​யில் குதிரைகளுக்கு கிளண்​டர்ஸ் பாக்​டீரியா தொற்று பரவல் எதிரொலி காரண​மாக, குதிரை சவாரிக்கு உடல் நலக்​குறை​வாக உள்ள குதிரைகளை பயன்​படுத்த வேண்​டாம்.

குதிரைக்கு காய்ச்​சல், இரும்​மல், மூக்​கில் சளி வடிதல், தோல் புண்​கள், சுவாசக் குறைவு போன்ற அறிகுறிகள் தென்​பட்​டால் அந்த குதிரைகளை சவாரிக்கு உரிமை​யாளர்​கள் அனு​ம​திக்​கக் கூடாது. குதிரைகளின் தேவையற்ற போக்​கு​வரத்தை தவிர்க்க வேண்​டும்.

நோயுற்ற குதிரைகளை தனிமைப்​படுத்த வேண்​டும். குதிரை இருப்​பிடங்​கள் மற்​றும் உபகரணங்​களை முறை​யாக சுத்​தம் செய்து கிருமி நாசினி மூலம் தூய்​மைப்​படுத்த வேண்​டும்.

சென்னை உள்​ளிட்ட பல கடற்​கரைகளில் குதிரை சவாரி ஈடு​படு​பவர்​களுக்கு கட்​டுப்​பாடு விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ஊட்​டி, கொடைக்​கானல் உள்​ளிட்ட சுற்​றுலா தளங்​களி​லும் குதிரை சவாரி​யில் ஈடு​படு​பவர்​கள் முறை​யாக வழி​காட்டு நெறி​முறை​களை பின்​பற்றி சவாரி மேற்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.