முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் வடக்குப் பிரதேசத் தொகுதியினரின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை யாழ். மல்லாகத்திலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நூற்றுக்கணக்கானவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.






