துறவிகள் அமைப்பின் தலைவராக பாஜக பெண் நிர்வாகி நியமனம்

பாஜக பெண் தலை​வர் முனை​வர் உதிதா தியாகி, கட்​சி​யின் மகளிர் பிரி​விலும் ‘மகா காளி வாஹினி’​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ராக​வும் உள்​ளார்.

இந்​நிலை​யில், துறவி​கள் அமைப்​பான ‘ஜுனா அஹா​ரா’ இவரை மகா மண்​டலேஸ்​வ​ராக நியமித்​துள்​ளது. மேலும், ‘யாதி மா பிரத்யங்​கிரா கிரி’ என்ற புதிய பெயரை​யும் உதி​தாவுக்கு சூட்டியுள்ளது. ஹரித்​வாரின் கன்​காலில் உள்ள ஹரிஹர் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில், ஜுனா அஹா​ரா​வின் மூத்த துறவி ஆச்சார்ய மகா மண்​டலேஸ்​வர் சுவாமி அவ்தேஷானந்த் கிரி, உதிதாவுக்கு முறைப்​படி பொறுப்பை வழங்கி​னார்.

அத்​துடன் முராத் நகரில் உள்ள ‘ ஸ்ரீமகா காளி பீடம் அனு​மன் தாம்’ அமைப்​பின் பீடா​திப​தி​யாக​வும் உதிதா அறிவிக்​கப்​பட்​டார். ஆச்சார்ய மகா மண்​டலேஸ்​வர் சுவாமி அவதேஷானந்த் கிரி மகாராஜ் அவருக்கு முறைப்​படி தீட்சை வழங்கி கவுர​வித்​துள்​ளார்.

இது​போல் பெண் துறவி​களுக்கு முக்​கிய பதவி​கள் வழங்​கு​வது அரி​தானது. முனை​வர் உதிதா தியாகி பல ஆண்​டு​களாகச் சமூக மற்​றும் அரசி​யல் நடவடிக்​கை​களில் தீவிர​மாக ஈடு​பட்டு வருகிறார். அவர் பாஜக மகிளா மோர்ச்​சா​வில் மண்டல அளவில் முக்​கிய பொறுப்பு வகிக்​கிறார்.

‘மகா காளி வாஹினி’​யின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ராக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். சிறந்த கல்​வி​யாள​ராக திகழும் உதிதா 2 பாடப் பிரிவு​களில் முனை​வர் பட்​டம் பெற்​றவர். மாணவர் பருவத்தில் உ.பி. ரோஹில்​கண்ட் பல்​கலைக்​கழகத்​தில் முதலிடம் பிடித்​தவர். அழகிப் போட்​டி​யிலும் வெற்றி பெற்​றுள்​ளார்.

இதுகுறித்து உதிதா தியாகி சமூக ஊடகங்​களில் தெரிவிக்கையில், “பூஜ்ய தாதா குரு ஹரி​கிரி மகா​ராஜ், யதி நரசிம்​ஹானந்த் கிரி மகா​ராஜ் மற்​றும் ஆச்​சார்ய மகா மண்டலேஷ்வர் சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகா​ராஜ் ஆகியோரின் ஆசி​யுடன் இந்​தப் பொறுப்பை ஏற்​றுக் கொண்டுள்ளேன். இது எனக்​குக் கிடைத்த கவுர​வம் மற்​றும் மிகப்​பெரிய பொறுப்​பு. சனாதன தர்​மத்​துக்​குச் சேவை செய்​வ​தில் நான் அர்ப்​பணிப்​புடன் இருப்​பேன்” என்றார்.