இந்தியாவில் போலி கடவுசீட்டு அல்லது விசா பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை ; புதிய சட்டம் அமுல்

இந்தியாவிற்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் வெளிநாட்டினர் சட்டம், 2025, போலியான கடவுசீட்டுகள், விசாக்களுக்கு கடுமையான தண்டனைகளை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் குடியேற்றச் சட்டங்களை ஒருங்கிணைத்து புதுப்பிக்கும் மற்றும் போலி கடவுசீட்டு அல்லது விசாக்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் புதிய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025, திங்கட்கிழமை அமுலுக்கு வந்தது.

இந்த சட்டம் பாராளுமன்ற வரவு செலவு கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்டு, ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி அன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அனுமதியை பெற்றது.