ஆசியாவில் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வர்த்தகத்தில் சர்வதேச மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் மசகு எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 106 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஈரான் மீது போர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக திங்கட்கிழமை வர்த்தக அமர்வு முடிவில் அமெரிக்க மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலரைக் கடந்தது. இது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த விலையாகும்.
சர்வதேச அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் விலையும் செவ்வாய்க்கிழமை 2 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, ஒரு பீப்பாய் 115 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
இந்நிலையில், உடனடி உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.




