பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புறப்பட்ட 900 புலம்பெயர்வோர்

கடந்த வார இறுதியில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக சுமார் 900 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சிலிருந்து புறப்பட்ட 900 புலம்பெயர்வோர்

வெள்ளிக்கிழமை துவங்கி, கடந்த வார இறுதியில் 890 புலம்பெயர்வோர் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாக எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

நேற்று பிரித்தானிய எல்லை பாதுகாப்புப் படைக்கு சொந்தமான இரண்டு படகுகள் பிரான்சிலிருந்து வந்த புலம்பெயர்வோரை Dover துறைமுகத்தில் இறக்கும் காட்சிகள் சில பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

கடலில் பயணிக்க சாதகமான சூழல் காரணமாகவே இப்படி பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆங்கிலக்கால்வாய் வழியாக பயணிக்கத் துணிந்ததாக பிரித்தானியா தரப்பு கூறுகிறது.

பிரான்ஸ் தரப்போ, பொலிசார் புலம்பெயர்வோரை தடுக்க முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், கடத்தல்காரர்கள் தங்களைவிட விரைவாக மாற்று வழிகளை கண்டுபிடித்துவிடுவதாக தெரிவித்துள்ளது.

ஆக, பிரித்தானியாவும் பிரான்சும் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், அதையும் மீறி, உயிர்ச்சேதம் ஏற்படும் நிலையிலும், ஏராளமான புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுகொண்டுதான் இருக்கிறார்கள், தங்கள் முயற்சியில் வெற்றியும் பெறுகிறார்கள்!